3/10/2019

வேலையற்ற பட்டதாரிகள் சங்க தீர்மானங்கள்

Résultat de recherche d'images pour "graduate"


இன்று (10.03.2019) மட்டக்களப்பு_மாவட்ட_வேலையற்ற_பட்டதாரிகள்_சங்கத்தின் விஷட பொதுக்கூட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
இதன்படி,
இன்று 150 க்கு மேற்பட்ட பட்பதாரிகள் இவ் ஒன்றுகூடலுக்கு வருகைதந்திருந்தனர்.
பட்டதாரி சங்கத்திலிருந்த நிர்வாக கட்டமைப்பு வெற்றிடங்களை நிரப்புதல், மற்றும் எமது தொழிலுரிமையை பெற்றுக்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் என பல முக்கிய தீர்மானங்களை இவ் ஒன்றுகூடலில் எடுக்கக்கூடியதாக அமைந்தது.
இதன்படி,
தலைவர்:-சி.சிவகாந்தன்,
செயலாளர்:-ரெக்ளின் தேவராஜன்,
பொருளாளர்:-பிரதக்க்ஷன்,
உ.ப தலைவர் :-துவாரகன்,
ஒருங்கிணைப்பாளர்:-மயூரதன்,
மற்றும் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிற்கும் ஒவ்வொரு இணைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
அடுத்து, மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன,
01.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டதாரிகளும் பதிவுசெய்யப்பட உள்ளனர்.
02.கிழக்கு மாகாண ஆளுனரை சந்திப்பதற்கான அனுமதியை பெற்று அவரிடம் கிழக்குமாகாணத்திலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக வலியுறுத்தப்பட உள்ளது.
03.மட்டக்களப்பிலுள்ள அமைச்சர்கள்,பாராளுமற்ற உறுப்பினர்கள், இரு தேசியக்கட்சிகளான ஐ.தே.க, சி சு க  போன்ற கட்சிகளின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் போன்றோரை அழைத்து மத்திய அரசின் பட்டதாரி நியமனங்கள் தொடர்பாக கலந்தாலோசித்தல் 
என மூன்று முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்.0 commentaires :

Post a Comment