6/23/2019

சுமந்திரனுக்கு மக்கள் ஏன் செருப்பால் எறிந்தனர் ?

இரத்தின தேரரும், ஞானசாரரும் கல்முனை விவகாரத்தில் தலையிட்டு விட்டார்கள் என இன்று ஒப்பாரி வைப்பவர்கள், இந்த பிரச்சினையை விட்டுக்கொடுப்புடன் சுமூகமாக பேசி தீர்க்க எப்போதோ முன்வந்திருக்க வேண்டும்" என்று கல்முனை விவகாரத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மனோ கணேசன். அவர் கூறுவது கவனத்திற்குரியது. Image associée
ஏனென்றால், நுவெரெலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களாக இருந்ததை 10 பிரதேச செயலகங்களாக மாற்றியிருக்கின்றது தமிழ் முற்போக்குக் கூட்டணி.
இதைப்போல எட்டு உள்ளுராட்சி மன்றங்களைப் பன்னிரண்டு மன்றங்களாக அதிகரித்திருக்கிறது. இதன்படி 05 பிரதேச சபைகள் இப்போது 09 பிரதேச சபைகளாயிருக்கின்றன. ஏற்கனவே இருந்த மூன்று நகரசபைகளோடு சேர்த்து இப்பொழுது அங்கே 12 சபைகள் இயங்குகின்றன.
இதற்கான அரசியல் உபாயங்களை வகுத்து, உத்திகளைப் பயன்படுத்தி வெற்றிபெற்றிருக்கிறது தமிழ் முற்போக்குக் கூட்டணி.
இதில் முக்கிய பங்காற்றியவர்கள் மல்லியப்பு திலகர், அமைச்சர்கள் மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோர். இதை எப்படி அவர்கள் சாதித்தனர் என்பதைப்பற்றிய விவரம் தனியான பதிவாக எழுதுகிறேன்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் உச்ச பயனைப்பெற்றது மலையகப் பிரதிநிதிகளாகத் தானிருக்கும் என எண்ணுகிறேன்.
முன்பு நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவத்தில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் நீண்டகாலமாகவே குறைந்திருந்தது. விகிதாசார அடிப்படையில் அதிகமானவர்களாகத் தமிழர்களிருந்தும் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாதிருந்தது. இன்று அந்த நிலையை மாற்றியிருக்கின்றனர். இதைச் சாத்தியப்படுத்தியது இளைய பாராளுமன்ற உறுப்பினர்களான மல்லியப்பு திலகர் என்கிற திலகராஜ் மற்றும் மனோ கணேசன், திகாம்பரம் போன்றோர்.
ஆனால், பல தசாப்தங்களாகவே பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் தலைவர்களாகவும் இருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் (சம்மந்தன், மாவை உள்ளிட்ட கொம்பனியினர்) கல்முனையில் உள்ள உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இப்போது செருப்பால் எறியை வாங்குமளவுக்குக் கீழிறங்கியிருக்கின்றனர்.
இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது என்பதைப் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கும் பதிவில் படிக்கலாம்.
இதைப்போல மூதூர், தென்மராட்சி, கரைச்சி ஆகிய பிரதேச செயலகங்களை பிரித்து இரண்டிரண்டாக மாற்ற வேண்டிய அவசியமுள்ளது. ஆனால் அதையும் செய்யத் தெரியாமல் உள்ளது கூட்டமைப்பு. இதையெல்லாம் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்வதற்கு அந்த அமைப்பும் தயாரில்லை. அதை ஆதரிப்போரும் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால்தான் செருப்பால் மக்கள் எறிகிறார்கள்.  
நன்றி முகநூல் தோழர் கருணாகரன் 
»»  (மேலும்)

மறுசீரமைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்

Résultat de recherche d'images pour "தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்"  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிர்வாக மறுசீரமைப்பு திட்டம் ஆரம்பமாகியுள்ளது. இதனடிப்படையில் வாகரைப் பிரதேச மறுசீரமைப்புக் குழுக் கூட்டம் 22.06.2019 ம்திகதி கட்சியின் பிரதித்தலைவர் நாகலிங்கம் திரவியம் அவர்களின் தலைமையில் கண்டலடி மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் கட்சியின் பிரதித்தலைவர் கந்தையா யோகவேள்,கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் போது வாகரை பிரதேசத்துக்கான  வட்டார அமைப்பாளர்கள்,பிரதேச அமைப்பாளர்கள், பிரதேச இணைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். 
»»  (மேலும்)

6/19/2019

மூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் பிரசாந்தனும்,கருணாவும்,கோடிஸ்வரனும் !!

மூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் பிரசாந்தனும்,கருணாவும்,கோடிஸ்வரனும் !!L’image contient peut-être : une personne ou plus, personnes debout et texte
சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் தலைமையிலான போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது. 
உடல்நிலை மோசமடைந்துள்ள அவருக்கு இரு தடவைகள் முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று மாலை போராட்ட களத்திற்குச் சென்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய நிர்வாகசேவை அதிகாரிகள், போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.
எனினும் போராட்டக்காரர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர். அத்தோடு அரச அதிபர் இந்த விடயத்தில் ஏதாவது முடிவெடுப்பதென்றால் இன்று மதியம் 2 மணிக்குள் எடுக்கும்படியும் அதற்குள் முடிவொன்று எடுக்கப்படாவிட்டால் மதியம் 2 மணிக்கு அதிரடி முடிவொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர் .
இப்போது உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்திற்க்கு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன் ஆகியோர் சமூகமளித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு தினங்களை விடவும் இன்று அதிக மதகுருமார், பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்துவருகிறார்கள்.

நூருல் ஹுதா உமர்
( மாளிகைக்காடு நிருபர் )
»»  (மேலும்)

6/16/2019

சுவாமி யோகேஸ்வரனுக்கே பேய்க்கு பயமாம்

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் நெருங்கிய உறவினர்.  இருவரும் கல்குடா தொகுதியை சேர்ந்தவர்கள்.  யோகேஸ்வரனுட்பட தமிழரசு கட்சியின் செயலாளர் என்று சொல்லப்படுகின்ற துரைராஜசிங்கம் கூட இந்த தொகுதியை சேர்ந்தவர்தான்.Résultat de recherche d'images pour "யோகேஸ்வரன்"

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய இரு தொகுதிகளையும் விட இந்த தொகுதியிலேயே சந்திரகாந்தனுக்காக அதிக செல்வாக்கு காணப்படுகின்றது. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இந்த கல்குடா தொகுதியிலுள்ள வாகரை வாழைச்சேனை செங்கலடி ஆகிய பிரதேச சபைகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் வளர்ச்சி தமிழரசு கட்சியை யாரும் எதிர்பாராதவிதமாக ஓரங்கட்டியது. 

இன்றைய நிலையில் சந்திரகாந்தன் போன்ற உறுதியான செயல்திறன் மிக்க தலைமையொன்றின் தேவையை கிழக்குமாகாண மக்கள் அதிகமாகவே உணர்ந்து வருகின்றார்கள். எனவே எதிர்வரும் காலங்களில் கல்குடா தொகுதியில்  தமிழரசு கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவுவது நிச்சயமாகி வருகின்றது.

இந்த நிலையில் தமிழரசு கட்சியினருக்கு அதிலும் குறிப்பாக யோகேஸ்வரனுக்கு குலை நடுக்கம் பிடிக்க தொடங்கியுள்ளது. அருகிலிருப்பவன் குசு விட்டாலும் அது பிள்ளையானால்தான் என்று குற்றம் சாட்டுமளவுக்கு அனைவரது மனநிலை வந்து விட்டது. 

கடந்தவாரம்  பிள்ளையானுடைய பெரும் பணிகளில் ஒன்றாகிய பேத்தாளை நூலக ஆய்வு மாணவர்களின்  தேவை கருதி வாழைச்சேனை தவிசாளர் கிழக்கு மாகாண சபை கன்சாட்டின் பிரதிகளை திரட்ட வேண்டிய தேவையேற்றப்பட்டது.

அதன்காரணமாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரான  திரவியம் ஜெயம் அதனை தருவதற்கு சம்மதித்தார். அதனை பெற்றுக்கொள்ள  நூலகர் பிரகாஸ் தவிசாளரினால் அனுப்பி வைக்கப்பட்டார். திரவியம்   தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பிரதித்தலைவர் என்பதனால் அவரது வீட்டிலிருந்து பெரிய கட்டுகளை கொண்ட பிரதிகள் கொண்டுவரப்படுவதை அறிந்த யோகேஸ்வரன் அதனை தமக்கெதிரான துண்டு பிரச்சாரங்கள்  என எண்ணி அவற்றை பறித்து வருமாறு தமது சகாக்களுக்கு   கட்டளையிட்டுள்ளார். அதனை பறிக்க சென்ற இருவர் பிரகாஷையும் அவரது உதவியாளரையும் தாக்கிவிட்டு அவற்றை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசாரிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

யோகேஸ்வரனிடம்    சில கேள்விகள் அது நோட்டீஸாகவே 
இருந்திருந்தாலும் -------

 *ஐயா பிள்ளையானின் ஆட்கள் உங்களுக்கெதிராக நோட்டீஸ் அடித்து விட்டால்த்தால் என்ன? எவருக்கும் அமைதி வழியில் கருத்து சொல்வதற்கான உரிமை உண்டுதானே?

*ஒரு  நோட்டிஸுக்கே இப்படி நீங்கள் பதற  வேண்டிய அவசியம் என்ன? உங்கள் கையாலாகாத்தனங்கள் வெளிவரக்கூடாது என்கின்ற முன்னெச்சரிக்கையா? 

*இப்பவே இப்படி பயப்பட்டால் எதிர்வரும்  தேர்தல் காலத்தை எப்படி சமாளிக்க போகின்றீர்கள்?

*அதுசரி நீங்கள் மாது கூட  ஏதுமில்லாத பூசாரி ஆயிற்றே உங்கள் கையாட்கள் எப்போதும் நல்ல மது போதையில்தான் தயாராக இருப்பார்களா?

*அடிதடி என்பது மனித உரிமை மீறல் அல்லவா அதை ஒரு பாராளுமன்ற உறுப்பினரே ஊக்குவித்தால் அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்?

 *ஒரு பூசாரிக்கே இருண்டதெல்லாம் பேயாக தெரிகிறதென்றால் சுவாமி யோகேஸ்வரனுக்கே பேய்க்கு பயமாம் என்று ஊரல்லவா சிரிக்கும்?
»»  (மேலும்)

6/14/2019

யோகேஸ்வரன் எம்பியால் நூலக உத்தியோகஸ்தர் தாக்கப்பட்டார்

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனால் அனுப்பி வைக்கப்பட்டவர்களினால் வாழைச்சேனை பேத்தாளை பொது நூலக உத்தியோகத்தர் தாக்கப்பட்டு ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.Résultat de recherche d'images pour "யோகேஸ்வரன்"

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது.

தேசிய ரீதியில் சிறந்த நூலகமாக விளங்கிக்கொண்டிருக்கும் பேத்தாளை பொது நூலகமானது பல தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தும் செயற்றிட்டத்தினை வாசகர் வட்டத்துடன் இணைந்து செயற்படுத்தி வருகின்றது.
அதனடிப்படையில் கிழக்கு மாகாணசபையின் அதிகாரபூர்வ அறிக்கையானது (ஹன்சாட்) குறித்த நூலகத்தில் 2008 தொடக்கம் 2012 வரை உள்ளதுடன் அதன் பின்னரானவை இல்லாததனால் அதனை கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் திரவியம் அவர்களிடம் பெற்றுக்கொள்வதற்கு நூலக உத்தியோகத்தர் ம.பிரகாஸ் அவர்களும், வாசகர் வட்ட உறுப்பினர் தஹிவரன் அவர்களும் கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் அவர்களின் அனுமதியுடன் 05.06.2019 அன்று சென்றுள்ளனர்.
ஹன்சாட் அறிக்கைகளை திரவியம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு வரும்போது குறித்த பிரதேசத்தில் ஊடகவியலாளராக செயற்பட்டுபவரும் கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையின் கீழ் இயங்கும் பொது நூலகத்தின் நூலகரான கைலாயப்பிள்ளை ருத்திரன் என்பவரும் கோறளைப்பற்றுறு பிரதேதச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரியும் வெற்றிவேல் மோகன்ராஜ் என்பவரும் ஹன்சாட் ஆவனங்களுடன் வந்த பிரகாஸ் அவர்களை தாக்கிவிட்டு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கல்குகுடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்கியவர்களை பொலிசார் விசாரித்தபோது இவ் ஆவணங்களை பறித்து வரும்படி யோகேஸ்வரன் அவர்கள் அனுப்பியதாக பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வவரனிடம் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் தொடர்புகொண்டு கேட்டபோது தான்தான் அவ் ஆவணங்களை பறித்துவரும்படி குறியதாக யோகேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார்.
»»  (மேலும்)

6/13/2019

ரஞ்சித் சொன்னது உண்மையைத் தவிர வேறில்லை.Résultat de recherche d'images pour "pa ranjith"


சங்க காலத்தில் தமிழ்நாட்டின் பல  பகுதிகளை சோழர்கள் ஆண்டனர். ஆனாலும் பிற்கால சோழராட்சி  எனப்படுவது தொடர்ச்சியான சுமார் 430 ஆண்டுகால வரலாற்றை கொண்டது. சோழ மன்னர்கள் 850ஆம் ஆண்டு தொடங்கி 1279 வரை கொடி கட்டி பறந்தனர். 

இவர்களில் இராஜ  இராஜ சோழனது ஆட்சிக்காலம் 985-1014 வரையானதாகும்.  இவனே சேர,பாண்டிய,மற்றும் இலங்கை போன்றவற்றை வென்று கொடிநாட்டினான். வடக்கு நோக்கி பல் பகுதிகளை வென்றான்.

இலங்கையில் பொலன்னறுவையை தலைநகராக கொண்டு ஆட்சி  செய்தான். இவனது காலத்தில் போர்களில் கைதிகளாக்கப்பட்ட  அடிமைகளை கொண்டே பிரமாண்டமான  தஞ்சை பெருங்கோவில் கட்டப்பட்டது. அதில் ஈழத்திலிருந்து சிறை பிடிக்கப்பட்ட கைதிகளும் அடங்கும். 

ஆலய வழிபாடுகள் வைதீக முறைமைக்குள் உள்வாங்கப்பட்டு பிராமணர்கள் சமூகத்தின் பிரதான பாத்திரம் வகிப்பவர்களாக முன்னிறுத்தப்பட்டனர். இராஜராஜ சோழன் எங்கிருந்தோ வந்த பிராமணர்களுக்கு கோவில் நிலங்கள் என்கின்ற பெயரில் ஏராளமான  பிரமதேயங்களை  வழங்கினான்.   ஆலயங்கள் அரசனது நிலவுடமை,பொருளாதார மையங்களாக மாறியது. 

அதுவரை காலமும் இந்நிலங்களை வைத்திருந்த   பூர்வீக குடிகள் நிலமற்றவர்களாக மாற்றப்பட்டனர். சாதிமுறைமைகள் வலுவாக்கப்பட்டு பூர்வகுடிகள் சூத்திரர்களாக, தலித்துகளாக ஏதுமற்றவர்க்ளாக ஒடுக்கப்படும் வரலாறு தொடங்கியது. 

»»  (மேலும்)

6/09/2019

ஈழத்தமிழரின் கலைமுகம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஒரு கல்வியாளனாக, ஒரு நடிகனாக,ஒரு கவிஞனாக,ஒரு எழுத்தாளனாக,ஒரு நாடகக்காரனாக, ஒரு தமிழிசை ஆய்வாளனாக வியாபித்து நிற்கும் மகத்தான மனிதர் பேராசிரியர்.மெளனகுரு அவர்கள்.L’image contient peut-être : 1 personne, sourit, assis, plante, arbre, plein air et nature

தள்ளாத வயதிலும் அவரது உயிர்ப்பிலும் துடிப்பிலும் கலந்துவிட்ட தமிழிசையின் மகத்துவமே அவரை இன்றுவரை இயக்குகின்றது எனலாம்.

ஈழத்து புலமையாளர் வரிசையில்  பேராசிரியர்கள் வித்தியானந்தன்,கைலாசபதி,சிவத்தம்பி ஆகியோரின் தொடர்ச்சியாக  இன்றும் எம்முடன் வாழ்பவர்  பேராசிரியர் மெளனகுரு அவர்கள். 
தமிழர்களின் முதுசமான நாட்டுக்கூத்து செல்நெறி மரபின் சிறப்புகளை நவீன நாடக அரங்குடன் பின்னிப்பிணைப்பதில் பெரு வெற்றி கண்டவர்.

*1969ம் ஆண்டு இடம்பெற்ற தீண்டாமைஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முதலாவது மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட "சங்காரம்" எனும் சமூகநீதிக்கான நாடகம் இந்த மெளனகுருவினுடையது.

*நாடகமென்பது சினிமா "போலச்செய்வது" என்றிருந்த குண்டுசட்டிக்குள் குதிரைஒட்டிய அந்த காலங்களில் நாடகத்துறைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அவர் மேடையேற்றிய "புதியதொர்வீடு" நாடகம் ஆகும்.

*என்.கே.ரகுநாதனுடைய கந்தன்கருணையில் நடிகராகவும் சிதம்பரநாதனின் மண்சுமந்த மேனியார் நாடகத்தின் ஆட்டகோலங்களின் வடிவமைப்பாளராகவும் மெளனகுரு அவர்கள்  பங்கு வகித்தார்.

* ஈழத்து தமிழிசை,நடன மரபுகளை அடையாளப்படுத்தும் இவரது முயற்சியில் உருவான தமிழிசையணி  இன்று மட்டக்களப்பு கிராமங்களில் காலூன்ற வழிவகுத்தமை ஈழத்தமிழரின் வரலாற்றில் ஒரு மைல்  கல்லாகும். 

*இழிகுலத்தோர் இசை என்று ஒதுக்கப்பட்ட பறையொலியை  பல்கலைகழகத்துக்குள் நுழைத்து உலக நாடக விழா,பட்டமளிப்பு விழா போன்ற விழாக்களின் முன்னணி இசையாக முழங்க வைத்தவர் 

*சுமார் 25 நூல்கள் 250 ஆய்வு கட்டுரைகள்,பல்வேறு நாடகங்கள்,பல  பத்து சிறுவர் நாடகங்கள் என நீளும்  அவரது எழுத்தியக்கம் இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. 

ஆம் அவர் ஈழத்தமிழரின் கலைமுகம்.  அவருக்கு எமது உண்மைகள் இணையத்தளம் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

»»  (மேலும்)