7/28/2020

மட்டக்களப்பில் பிள்ளையான் அபார வெற்றி பெறுவார் வெளியாகியது கி.ப.மா ஒ. கருத்து கணிப்பு

கிழக்கு பல்கலைக்கழகங்கள் பழைய மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பானது எதிர்வரும் தேர்தல் குறித்த கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு 'பாராளுமன்ற தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம்' என்னும் பொருட்பட இக்கையேடு தொகுக்கப்பட்டுள்ளது. Eastern University of Sri Lanka - Free-Apply.com

 இக்கையேட்டில் இன்றைய விகிதாசார பிரதிநிதித்துவம், உறுப்பினர்கள் தேர்வாகும் முறைமைகள், பெண் பிரதிநிதித்துவங்கள், மற்றும் வாக்களிப்பு விகிதங்கள், போன்றவை பற்றிய விளக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இணக்க அரசியல், இனப்பிரச்சினைக்கான தீர்வு, சர்வதேச ஆதரவு, போன்ற அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த மக்களின் பார்வைகளும்  இவற்றின்பால் மக்கள் கொண்டுள்ள விருப்பு வெறுப்புக்கள் போன்றவை இத்தேர்தலில் செலுத்தப்போகும் தாக்கங்கள் பற்றிய கருத்துக்களும் பதிவாகியுள்ளன. 

அதேவேளை குறித்த கட்சிகள்  சார்ந்து  எத்தனை சத வீதமான மக்கள் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது பற்றிய கருத்துக்கணிப்புக்களும் இக்கையேட்டில் பதிவாகியுள்ளது. 

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதற்கு 51 வீதமானவர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஆனால் தமிழ் தேசியகூட்டமைப்பை ஆதரிக்க 32வீதமானவர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் 
இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

இக்கையேட்டின் தயாரிப்பில் பேராசிரியர், மற்றும் விரிவுரையாளர்களான   தணிகைசீலன், சிவகுமாரன், செந்தில் நாதன், சிந்துயா, கிசாந்தி, திவ்யா மிகிரங்கணி, மற்றும் சீவரத்தினம் போன்றோர் பங்கெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment