7/26/2020

வட கொரியா: முதல் கொரோனா தொற்று என அரசு அறிவிப்பு- என்ன நிலவரம்?

 

வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று என அரசு அறிவிப்பு- என்ன நிலவரம்?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பித்துச் சென்ற ஒரு நபர், இருநாட்டு எல்லை வழியாகக் கடந்த வாரம் வட கொரியா திரும்பியதாகவும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை நடத்திய வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன், எல்லை நகரான கேசாங்கில் பொது முடக்கத்தை அறிவித்துள்ளார்.

தங்கள் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பே இல்லை என முன்பு வட கொரியா கூறியிருந்தது. ஆனால், இதற்கு வாய்ப்பே இல்லை என நிபுணர்கள் கூறினர்.

''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பித்துச் சென்ற நபர், கடந்த ஜூலை 19-ம் தேதி சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து வந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது'' என கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வைரசைக் கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை உடனே செய்யுமாறு சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் கிம் வலியுறுத்தினார்.

அத்துடன், கடும் பாதுகாப்புகள் நிறைந்த எல்லையை அந்த நபர் எப்படிக் கடந்துவந்தார் என்பது குறித்த விசாரணைக்கு கிம் உத்தரவிட்டுள்ளார் என்றும், இதற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார் என்றும் கேசிஎன்ஏ கூறுகிறது.

0 commentaires :

Post a Comment