9/17/2020

கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி

 கொரோனா வைரஸ் பாதிப்புக்குஇ வயதான முதியவர்கள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் அதிகளவில் இலக்காகின்றனர். இருப்பினும் பல இடங்களில் 100 வயதை கடந்தவர்கள் கூட கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்தவகையில் அசாமை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பிலிருந்து நலம் பெற்றுள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மகேந்திர மோகன் சவுத்ரி மருத்துவமனையில் முதியோர் இல்லத்தில் வசித்து வரும் மாயி ஹாண்டிக்யூ என்ற 100 வயது மூதாட்டி 10 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.latest tamil news

0 commentaires :

Post a Comment