1/31/2021

அதிமுக கொடியுடன் வெளியே வந்தார் சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் நிறைவுற்று அதிலிருந்துaவிடுதலை ஆனாலும், தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று (ஜனவரி 31, ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். 

பிப்ரவரி 6ஆம் தேதி வரை சசிகலா பெங்களூருவில்தான் தங்கியிருப்பார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய சசிகலாவின் காரில் அதிமுகவின் கொடி இருந்தது. இது தற்போது பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. 

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயகுமார், "சசிகலா அதிமுகவில் எந்த ஒரு பதவியிலும் இல்லை. அவர் அதிமுகவின் கட்சிக் கொடியைப் பயன்படுத்த எந்த உரிமையும் கிடையாது" என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
»»  (மேலும்)

சிறுகதை நூல் வெளியீட்டு விழா.

'கா கலை இலக்கிய வட்ட'த்தின் மற்றுமொரு கட்டம், 'கா' வெளியீடாக கலாநிதி கென்னடியின் 'மான்களும் நாய்களும்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா.

9
»»  (மேலும்)

ஏற்றுவோமா கொடி ஏற்றுவோமா எதிர்வரும் 4ல் தேசியக்கொடி ஏற்றுவோமா

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி, கொழும்பு 07 இலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதுடன் அதற்கான ஏற்பாடுகளை உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

அதற்கிணங்க நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 07ஆம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடிகளை பறக்க விடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


அதற்கிணங்க அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பெப்ரவரி 3 மற்றும் 4ஆம் திகதிகளில் மேற்படி அரச நிறுவன கட்டிடங்களில் மின் குமிழ்களை ஒளிரச் செய்யுமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


»»  (மேலும்)

உறுதியானது அ.தி.மு.க பாரதிய ஜனதா கூட்டு

அதிமுகவும் பாஜகவும் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை இணைந்து சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி. நட்டா.

 

மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு வெளிவருவது இதுவே முதல்முறை.

கடந்த நவம்பர் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வந்திருந்தபோது பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

»»  (மேலும்)

சிலாபம் முன்னேஸ்வரத்தில் பிள்ளையானுக்கு அர்ச்சனை

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் சிறைவாசம் அனுபவித்த போது அவர்களின் விடுதலைக்காக வேண்டப்பட்ட வேண்டுதல் நேற்று நிறைவேற்றிவைக்கப்பட்டது. சிலாபம் முன்னேஸ்வரர் ஆலயத்தில் இவ்வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது.

முன்னேஸ்வர தேவாலயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனைப்பற்று அமைப்பாளர்  ஜேக்கப் சிலாபம் சென்று இவ்வேண்டுதலை நிறைவேற்றி வைத்துள்ளார். 

»»  (மேலும்)

1/28/2021

கூட்டமைப்பினர் சிறையில் வாடும் முன்னாள் போராளிகளையிட்டு பேச முன்வராதது ஏன்? - இனியபாரதி

'ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று மரணடைந்தவர்களைத் தேடுவதை விடுத்து, தற்போது உயிரோடு வாழ்ந்து வருபவர்களின், குறிப்பாக சிறையில் வாடும் முன்னாள் தமிழ்ப் போராளிகளுக்கு எதிர்காலத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வாருங்கள்' என்று முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பாளரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான குமாரசாமி புஷ்பகுமார்(இனியபாரதி) தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வேண்டுகோள் விடுத்தார்.   


காரைதீவிலுள்ள அம்பாறை ஊடக மையத்தில் நேற்றுமுன்தினம் மாலை அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.

"நான் திட்டமிட்ட பழிவாங்கல் காரணமாக சிறைக்குச் சென்றிருந்தேன். இதுவரை என் மீது நீதிமன்றில் 11வழக்குகளைத் தொடுத்துள்ளார்கள். அனுராதபுரம், கொழும்பு, காலி என பல சிறைச்சாலைகளுக்கும் சென்று தற்போது பிணையில் வந்துள்ளேன். அங்குள்ள முன்னாள் போராளிகள் படும் துயரம், கஷ்டங்கள் சொல்லில் அடங்காதவை.

மரணமடைந்தவர்களைப் பற்றி பேசுவோர் எம் மண்ணிற்காகப் போராடிய, உயிரோடு இருக்கின்ற முன்னாள் போராளிகளையிட்டு பேச முன்வராதது ஏன்? 'சிறையில் வாடும் முன்னாள் போராளிகளை விடுதலை செய்கிறேன், அனைவரும் என்னோடு இணைந்து பயணிக்க வாருங்கள்' என்று அன்று மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்மைப்பினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அன்று கூட்டமைப்பினர் அப்படிச் செய்திருந்தால் இன்று அவர்கள் விசாரணையின்றி வீணாக சிறையில் வாடுவதை தவிர்த்திருக்கலாம்.

30 வருட காலம் போராட்டத்தை வைத்துஅரசியல் செய்தார்கள். இன்று காணாமல் போனோர் மற்றும் தமிழ்சிறைக் கைதிகளின் விடுதலை என்று கூறி அரசியல் செய்கிறார்கள்.

»»  (மேலும்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு - ஜனாதிபதியிடம் அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் இன்றுடன் (27) உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன.

ஐவர் கொண்ட குறித்த ஆணைக்குழுவினால், இதுவரை 457 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

கடந்த 2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்து, அறிக்கையிடுதல் அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடந்த வருடம் செப்டெம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தனது அறிக்கையை குறித்த ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

»»  (மேலும்)

கரடியனாறு விவசாயப் பண்ணை துரிதமாக விருத்தியடையும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்துறைகளுள் விவசாயம் குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கரடியனாறு விவசாய பண்ணையும் ஒன்றாகும்.  மட்டக்களப்பின் விவசாயத்துறையை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இந்த விவசாயப்பண்ணை திறம்பட இயங்குதல் அவசியம். எனவே பண்ணையின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி அபிவிருத்தி செய்யும் நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விசேட முன்னெடுப்பொன்றினை மேற்கொண்டுள்ளார்.

கரடியனாறு விவசாய பண்ணை தொகுதிக்கு களவிஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து  விசேட கூட்டமொன்றினை  நடத்தியுள்ளார். இக்கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் போன்றவற்றை வழங்குதல்,

புதிய ரக விதைகளையும் விரைவாக பலன் தரக்கூடிய நாற்றுகளையும் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல்,

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையான விதைகளை இங்கேயே உருவாக்குதல்,

மாவட்டத்தில் உள்ள இரண்டு லட்சம் ஏக்கர் வயல் காணிகளிலும் எவ்வாறு விளைதிறனை அதிகரிப்பது,

இவ்வாறு உற்பத்தியினை பெருக்குவதன் மூலம் குறைந்தது 3000கோடி ரூபா வரையிலான பணத்தினை வேளாண்மை மூலமாக எமது மாவட்டத்திற்குள் கொண்டு வருதல்,

மண் பரிசோதனைகள் மூலம் பொருத்தமான பயிர் நிலங்களை கண்டுபிடித்து அங்கு பொருத்தமான முதலீட்டாளர்களை இனம் கண்டு பாரிய அளவான நிலப்பரப்பில் விவசாயத்தினை மேற்கொள்ளுதல்
 
வளம் குறைந்த மண்ணினை கொண்ட விவசாய காணிகளை எவ்வாறு வளமான காணிகளாக மாற்றுவதற்கான ஆய்வுகளை முன்னெடுத்தல், 

மாவட்டத்தில் காணப்படக்கூடிய குளங்களை புனரமைத்து விவசாயத்திற்கு தேவையான நீர் பாசனத்தினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல், 

மாவட்டத்தில் விவசாயத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அதிகளவில் வழங்குவதன் மூலமாக விவசாயம் சம்பந்தமான அறிவு பூர்வமான ஒரு சமூகத்தினை கட்டியெழுப்புதல்,

அதனை எதிர்காலத்தில் NVQ 4 பயிற்சி நெறிவரை தரம் உயர்த்துதல். இவ்வாறு தொடர்ச்சியான பயிற்சிகள் மூலம் நவீன விவசாய முறைகளைப் புகுத்தி ஏனைய நாடுகளைப் போன்று விவசாயத்தை நவீன மயப்படுத்தி விளைச்சலை அதிகரித்தல்,

விதைகளையும், விளைச்சலையும் பாதுகாப்பாக வைக்க கூடிய களஞ்சிய சாலைகளை உருவாக்கி விவசாயிகளை பாதுகாத்தல் 

போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

1/27/2021

மக்கள் குறைகள் மீது கவனம்கொள்ளும் பிள்ளையான்

.

ஐந்து வருட அரசியல் பழிவாங்கலில் இருந்து விடுதலையான பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் நாள்தோறும் மக்களை சென்று பார்த்து குறைநிறைகளை கேட்டறிந்து வருகின்றார்.  

அந்தவகையில்  இன்று  கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார்.  ஒருபுறம் இரு மாதகாலமாக கிராம  மக்கள் அளித்துவரும் பெருவாரியான வரவேற்புகள்  தொடருகின்றன. மறுபுறம் மக்களுக்கு ஏராளமான தேவைகளும் எண்ணிலடங்காத பிரச்சினைகளும் குவிந்து காணப்படுவதினையும்  பாடசாலைகள் மற்றும் மைதானங்கள் அதே போன்று வீதிகள் போன்ற பல்வேறு விதமான பொது தேவைகள் செறிந்து காணப்படுவதனையும்  மக்களுடன் உரையாடி தகவலறிந்து வருகின்றார் சந்திரகாந்தன்.பாடசாலைகள்,மைதானங்கள், வீதிகள் என்று பல்வேறு விதமான குறைபாடுகளும் நிறைந்த இடங்களை  சந்திரகாந்தன் நேரடியாகவே சென்று பார்வையிட்டு வருகின்றார்.

 
»»  (மேலும்)

1/26/2021

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி

குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தத் திட்டமிட்ட டிராக்டர் பேரணி போலீசார் வைத்த தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு இன்று (ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை) காலை தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தன. இதையடுத்து, போராட்டக்காரர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.


இதில் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த கைகலப்பில் 86 அதிகாரிகள் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம், போராட்டக்காரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

சுமார் 6-7 இடங்களில் இருந்து தனித்தனியே புறப்பட்ட டிராக்டர் பேரணிகளில் ஒன்று பகல் சுமார் 12 மணி அளவில் மத்திய டெல்லியின் ஐ.டி.ஓ. பகுதி வரையும், அடுத்து மதியம் இரண்டு மணியளவில் செங்கோட்டை பகுதியையும் அடைந்தன.
»»  (மேலும்)

1/25/2021

பிரபாகரனால் பெற்றுக்கொடுக்கமுடியாத உரிமைகளை சம்பந்தனால் பெற்றுக்கொடுக்கமுடியுமா?


போராட்ட அரசியலால் பெற்றுக்கொடுக்க முடியாத, தமிழர்களுக்கான தீர்வை எவராலும் பெற்றுக்கொடுக்க முடியாது என, பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 4ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டு.மாவட்ட பட்டிருப்புத் தொகுதிக்கான தேசிய மாநாடு பெரமுனவின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் பெரியபோரதீவில்   நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்றபோதே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழப்போராட்டம் 2009, ஆம் ஆண்டிலேயே மெளனிக்கப்பட்டு விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் பெற்றுக்கொடுக்க முடியாத தமிழீழத்தை என்னுடைய தாத்தாவாலோ உங்களுடைய தாத்தாவாலோ சம்பந்தனது தாத்தாவாலோ பெற்றுக்கொடுக்க முடியாது என தெரிவித்தார். 

»»  (மேலும்)

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு

இந்திய மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், முக்கியமாக அண்மையில் காலம்சென்ற பிரபலபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு  பத்ம விபூஷன், சாலமன் பாப்பையா அவர்களுக்கு  பத்ம ஸ்ரீ, பாடகி சித்ரா அவர்களுக்கு பத்ம பூஷன் போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

»»  (மேலும்)

வாழைச்சேனையில் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்


 
பாராளுமன்ற உறுப்பினர்  சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் டெங்கு நோயை கட்டுப்படுத்துதல் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசமானது மட்டக்களப்பு மாவட்டத்திலேயே மிகவும் டெங்கு நோய் தாக்கம் அதிகம் கொண்ட இடம் என்பது சுட்டிக் காட்டப்பட்டது. 

நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்துவது, டெங்கு நோய்த்தாக்கத்தினையும் மரணங்களையும் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இதில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தயோகத்தர்கள்,கிராம சேவகர்கள் உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

»»  (மேலும்)

வவுணதீவு காஞ்சிரங்குடா பிரதேசத்துக்கு சுத்தமான குடிநீர்

“நீரின்றி அமையாது உலகு”
என்கின்ற தொனிப்பொருளுக்கு அமைவாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் கௌரவ நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் பங்களிப்புடன் தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட “பிரஜா ஜல அபிமானி” என்கின்ற நாடு பூராகவும் ஆயிரம் கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக  காஞ்சிரங்குடா பிரதேசத்திற்கான பாதுகாப்பான குடிநீர் வசதி திட்டத்தினை  இன்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

அத்தோடு இதுபோன்று எதிர்வரும் காலங்களில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் இந்த குடிநீர் விநியோகத்தினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான திட்டமுன்மொழிவினை கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்காரஅவர்களிடமும் கௌரவ பிரதமர் அவர்களிடமும் சந்திரகாந்தன் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரகாந்தன்  அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில்தான்  வவுணதீவின் பல கிராமங்கள் குடி நீர் மற்றும் மின்சாரங்களை முதன்முதலாக பெற்றுக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. 


»»  (மேலும்)

1/24/2021

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பாஜகவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

 ஒரே நாடு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பாஜகவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் ஒரு மொழியல்லவா? தமிழர்களுக்கென்று கலாச்சாரம் இல்லையா? வரலாறு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

»»  (மேலும்)

மேய்ச்சல்தரை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குக---நீதிபதி பணிப்புரை

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும், மேய்ச்சல் தரையைப் பாவிப்பதை தடைசெய்யவேண்டாம் எனவும் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.


மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய அபகரிப்பு தொடர்பான வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் இன்று (22) எடுத்துக்கொள்ளப்பட்டது.

பண்ணையாளர்கள் சார்பில் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பான வழக்கு, கடந்த மாதம் 18ஆம் திகதி  தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகளும் மேய்ச்சல்தரையில் அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்ததாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.

இதன்போது, மேய்ச்சல் தரையில் பண்ணையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீதிமன்றின் கவனத்துக்குக்  கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, குறிப்பிட்ட அதிகாரிகள் மேய்ச்சல்தரை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், பண்ணையாளர்கள் மேய்ச்சல்தரையை பாவிப்பதை தடைசெய்யக்கூடாது, அதனை நடைமுறைப்படுத்துவதாக அரச சட்டத்தரணி ஏற்றுக்கொண்டதுடன், அது தொடர்பில் உரிய அதிகாரிகளை அறிவுறுத்துவதாக நீதிமன்றுக்கு வாக்குறுதியளித்தாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

தற்போது மேய்ச்சல்தரை அபகரிப்பட்டதாக தெரிவிக்கப்படும் பகுதியை தவிர, அப்பகுதியில் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்ககூடாது என்பதற்கும் அரச சட்டத்தரணி இணக்கம் தெரிவித்தார்.

வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் தற்போது பிடிக்கப்பட்டுள்ள காணியை அவ்வாறே பேணுமாறும் வேறு எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்ககூடாது என பணிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரத்தினவேல் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த வழக்கு, மார்ச் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
»»  (மேலும்)

வாசு குணமடைந்தார்

கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்றுவந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என, அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

»»  (மேலும்)

நூல்களூடாக சில நினைவுகள்- 'கிளிவெட்டி' குமாரதுரை
இலங்கையின் அரசியல் வரலாற்றில் குமாரதுரை என்னும் மனிதரும் தன்னாலான சில தடயங்களை விட்டுச்சென்றுள்ளார். எவ்விதமான அரசியல் பதவிகளையும் வகித்திராதபோதும் சில களப்பணிகளிலும் கருத்துருவாக்க  முயற்சிகளிலும் குமாரதுரையவர்கள் ஏற்படுத்திய அதிர்வுகள் மறக்கமுடியாதன. 

1939ஆம் ஆண்டு ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் 1956ஆம் ஆண்டு  அரசகரும மொழிசட்டம் கொண்டுவரப்பட்ட வேளைகளில் உருவான தமிழ் மொழி எழிச்சியினால் கவரப்பட்டு தமிழரசு கட்சியின் ஊடாக தமது அரசியல் வாழ்வை  ஆரம்பித்தவர். 

1960 ஆம் 70ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள்,பகிஷ்கரிப்புக்கள், என்று இடம்பெற்ற ஒத்துழையாமை செயற்பாடுகளில் ஒரு முன்னணி வீரனாக திருகோணமலையில் பிரகாசித்தவர் இவர்.

திருகோணமலை மாவட்டம் கிளிவெட்டியை பிறப்பிடமாக கொண்ட இவர் இலங்கையில் ஆயுதப்போராட்டம் உருவான ஆரம்ப காலங்களில் பல்வேறு தடவைகளில் ராணுவத்தால் கைதாகி 1975-1976ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு சிறையில் 11 மாதங்களும் 1984-1985ஆம் ஆண்டுகளில் வெலிக்கடை சிறையில் இரு வருடங்களுக்கு மேலாகவும்  சிறைவாசங்களையும் சித்திரவதைகளையும் அனுபவித்தவர்.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற வெலிக்கடை சிறை படுகொலையின் பின்னர் எஞ்சிய தமிழ் கைதிகளின் பாதுகாப்பு கருதி  மட்டக்களப்பு சிறைக்கு அவர்கள் மாற்றப்பட்டிருந்தனர். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையை உடைத்து அரசியல் கைதிகளை மீட்கும் திட்டத்தை தமிழீழ விடுதலை போராளிகள் மேற்கொண்டனர். இந்த சிறையுடைப்பில் தப்பித்த பலபோராளிகளை மட்டக்களப்பில் இருந்து காடுகள் மலைகளை கடந்து திருகோணமலை வரை பாதுகாப்பாக கொண்டுசெல்லும் பணியில் பங்கெடுத்தவர்களுள் குமாரதுரை  அவர்களும் ஒருவராக இருந்திருக்கின்றார்.

இறுதியாக அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வந்தபோது பல்வேறு நெருக்கடிகளைக்கடந்து டென்மார்க் நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்றார்.

அங்கிருந்துகொண்டும் புகலிட எழுத்து முயற்சிகளிலும் ஊடகப்பணியிலும் தன்னை ஈடுபடுத்தியவண்ணமே இருந்தார். விழிப்பு,மகாவலி போன்ற இணையத்தளங்களை  தனியாகவே முன்னின்று நடத்தினார். அதேபோன்று ரி.பி.சி, ரி.ஆர்.ரி  போன்ற புகலிட வானொலிகளின்  ஊடாக  யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என்றும் யுத்த சூழலில் இருந்து நாடும் மக்களும்  மீட்கப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக குரல்கொடுத்துவந்தவர்.

அதேபோன்று 2004 ஆம் ஆண்டில்  புலிகளுக்குள்  ஏற்றப்பட்ட கிழக்கு பிளவின் ஊடாக பல்லாயிரம் போராளிகள் ஜனநாயகப்பாதைக்கு திரும்பிய நிகழ்வை ஆதரித்து வரவேற்றார். அதே போல அந்த பிளவிலிருந்து உருவாகிய தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்னும் புதிய அரசியல் கட்சியின் உருவாக்கத்தை ஆதரித்து ஐரோப்பியநாடுகளில்  தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 

இறுதியாக தனது நீண்ட கால அரசியல் வரலாற்று அனுபவங்களின் முடிவாக "தமிழ் தேசியம் என்பது யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் நலன்களிலேயே  பின்னிப்பிணைந்தது"   என்பதனை அம்பலமாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அதனை கிழக்கு மாகாண மக்களுக்கு எடுத்து சொல்வதில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடன் இணைந்து தனது தள்ளாத வயதிலும் கிழக்குமாகாணத்தின் முலை முடுக்குகள் எங்கும் களப்பணியாற்றினார்.  அதனை தனது வரலாற்று கடமையாக நம்பினார்.

அதற்காகவே தன்னால் முடிந்தவரை தனது இறுதி காலங்களில் இரு நூல்களை எழுதி வெளியிட்டார். "இலங்கை அரசியல் வரலாறு-இழப்புகளும் பதிவுகளும்"  ,"எனதான வாழ்வும் மண்ணும்" என்பவையே அவையாகும்.


இலங்கையின் வரலாறு என்பது எப்படி தமிழரின் வரலாறுகளை புறமொதுக்கி  சிங்கள மேலாதிக்க வரலாறாக கட்டியமைக்கப்பட்டுள்ளதோ அதேபோன்றுதான் ஈழத்தமிழர் வரலாறு என்பதும் கிழக்கு தமிழர்களை புறமொதுக்கி யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் வரலாறாக கட்டியமைக்கப்பட்டுள்ளது. என்பதனை  விலாவாரியாக தருகின்றன இவ்விரு நூல்களும். 

  ஆட்சிக்காலங்ளையும் யாப்புகளையும் வரிசைப்படுத்தி தொகுத்தளிக்கும் நூலாகவன்றி ஒவ்வொரு அரசியல் மாற்றத்தின் பின்னணிகளையும் அவை ஏற்படுத்திய சமூக பொருளாதார மாற்றங்களையும் பேசுகின்றது இழப்புகளும் பதிவுகளும் என்கின்ற நூல். அதுமட்டுமன்றி சுமார் நூறாண்டுகாலத்தில் நாம்  கடந்துவந்த பாதைகளை கிழக்கு மாகாண பிரசையொருவனின் பார்வையிலிருந்து விளக்குகின்ற புதியதொரு வரவாக இந்நூல் அமைந்திருப்பது சிறப்பாகும். 

குமாரதுரையவர்கள் இறந்து நேற்றுடன் ஈராண்டுகள்  நிறைவு பெறுகின்ற தருணத்தில் அவர் விட்டுச்சென்றுள்ள இந்த இரு நூல்களும்   வரலாற்று ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரின்  கவனத்தை கோரி நிற்கின்றன. 
»»  (மேலும்)

1/23/2021

ஆசிரிய நியமனங்களில் பின்தங்கிய பிரதேசங்களுக்கே முன்னுரிமை - கிழக்கிலங்கை உயர்க்கல்வி மாணவர் ஒன்றியம்

கடந்த ஆண்டு நாடெங்கிலும் காணப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு 'பயிலுனர்கள்' என்கின்ற பதவிநிலையூடாக நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதனடிப்படையில்  பதவிகளைப்பெற்றுக்கொண்ட 1934 பேர் மட்டக்களப்பு  மாவட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தனர். இந்த பட்டதாரி பயிலுனர்களுக்கு குறித்ததொரு  ஒரு பதவிநிலையினை சார்ந்த நியமனங்களை  வழங்குவது பற்றிய  இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படாதிருந்தது. இவ்வாறாக  இருந்த இழுபறி   நிலைக்கு தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு இணை தலைவருமான கெளரவ.சந்திரகாந்தன் அவர்களது தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி பயிலுனர்களை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளும் பணிகள் தொடங்கியுள்ளன. இத்தீர்மானத்தின் ஊடாக பயிலுனர்களாக இருந்தவர்களுக்கு நிரந்தர பதவிநிலையொன்று  வழங்கப்பட்டிருப்பது மட்டுமன்றி அதேவேளை  கல்வித்துறைசார்ந்து காணப்படுகின்ற ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்திசெய்யும் வண்ணம் சமயோசிதமாக  இவ்விடயமானது கையாளப்பட்டுள்ளது.


இது பற்றிய தமது அறிக்கையில் கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தின் ஆசிரிய நியமனங்களில் பின்தங்கிய பிரதேசங்களுக்கே  முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனக்கோரிக்கை விட்டுள்ளனர். 

மேலும் ஒன்றியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
இதனடிப்படையில் பயிலுனர்கள் பதவிநிலையிலிருந்த 1934 பேரில் 1534 பேர் ஆசிரியர்களாக பணிபுரிய விருப்பம் தெரிவித்திருந்தனர். இவர்களில் 1232 பட்டதாரிகள் ஆசிரிய பயிலுனர்களாக தேர்தெடுக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டம் முழுக்க நீண்டகாலமாக காணப்பட்டுவந்த ஆசிரியர் பற்றாக்குறைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

மேற்படி தீர்மானத்தினை நாம் வரவேற்பதோடு பட்டதாரி  பயிலுனர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

அத்தோடு இந்நியமனங்களாவன   ஐந்து கல்வி வலையங்களுக்குமுரிய தேவைகளினடிப்படையில் பிரிந்து வழங்கப்பட்டுவருவதாக அறியமுடிகின்றது. இவ்வரிய செயலானது  நீண்டகாலமாக ஆசிரியர் பற்றாக்குறையில் சிக்கித்தவித்து கிடந்த  பின்தங்கிய படுவான்கரை,மற்றும் வாகரை பிரதேச மாணவர்களுக்கு கிடைத்துள்ள பெரும்  வரப்பிரசாதமாகும் என நாம் கருதுகின்றோம்.

ஆனால் எமது இந்த இளம் ஆசிரியர்களில் பலர் நியமனங்களை  பெற்றுக்கொள்ளமுன்பே வசதிவாய்ப்புகள் அதிகமாக உள்ள பாடசாலைகளையும் தத்தமது சொந்த கிராமங்களுக்கு அருகேயிருக்கக்கூடிய பாடசாலைகளையும் குறிவைத்து இடமாற்றங்களுக்கு முயற்சிப்பதாக வேதனையான தகவல்கள் வெளிவருகின்றன.

இவ்விடயத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்வி அதிகாரிகளும் மாணவர்களின் நலன்களில் நின்று  இறுக்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். 

எமது இளம் ஆசிரியர்களும் 'ஆசிரியபதவி' என்பதனை  மாதாந்த சம்பளத்துக்கான உத்தியோகமாக  மட்டும் கருதாது மக்கள் நலன் சார்ந்த மகத்தான பணி  செய்யும் வாய்ப்பாகவும்  கருதவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம். பின்தங்கிய பிரதேசங்களுக்கு சென்று கல்விகற்பிக்க எமது மாவட்டத்தை சேர்ந்தவர்களாகிய  நாமே முன்வராவிட்டால் எமது மாவட்டம் எப்படி முன்னேற முடியும்? காங்சிரங்குடாவுக்கும் காயங்கேணிக்கும் கற்பிக்க  ஆசிரியர்களை வேறு மாவட்டத்திலிருந்தா கொண்டுவரமுடியும்? என்பதை தயவுடன் சீர்தூக்கி பார்க்குமாறு வேண்டுகின்றோம் .

ஒரு காலத்தில்  யாழ்ப்பாணத்திலிருந்து எமது மாவட்டத்துக்கு மட்டுமன்றி இலங்கையின் மூலை முடுக்குகளெங்கும்  சென்று கல்வி கற்பித்த ஆசிரியர்களை எண்ணிப்பாருங்கள். அவர்களின் தியாகங்கள் எத்தகையது? சுமார் 70-80ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து மக்களின் பார்வையில் 'பில்லி சூனியம் நிறைந்ததாக சொல்லப்பட்ட  மட்டக்களப்பு' போன்ற இடங்களுக்கு உயிரை கையில் பிடித்துக்கொண்டு  வந்து ஆசிரியர்களாக பணியாற்ற எத்துணை மனோதிடமும் சேவை மனப்பாங்கும் இருந்திருக்கவேண்டும்? 

அவற்றில் பத்தில் ஒருபங்கு கூட இன்றைய இளைஞர்களிடத்தில் இல்லாவிட்டால் எமது சமூகம் எப்படி முன்னேற முடியும்? என்று சிந்திக்க வேண்டுகின்றோம்.

யுத்தகாலத்தில் கூட பல பத்து கிலோமீற்றர்  தூரங்களிலிருந்து எத்தனையோ இராணுவ சோதனைச்சாவடிகளையும் குண்டு வெடிப்புகளையும் 
கடந்து வெறும்  ஒற்றைச் சயிக்கிள்களை மட்டுமே நம்பி வந்து நமக்கு கற்பித்து சென்ற ஆசிரியர்களை நாம் மறந்துவிட முடியுமா? அவர்களின் தியாகங்களும் சேவை மனப்பாங்கும் இல்லாவிட்டால் நாமெல்லாம் இன்று பட்டதாரிகளாக வந்திருக்கமுடியுமா? 

எனவேதான்  வாழ்க்கையில் முதலாவது உத்தியோகம் கிடைத்துள்ள இளம்வயதில் நான்கு  ஊர்கள் கடந்து மக்கள் பணிசெய்ய  தயங்குகின்ற எமது உறவுகள்  தங்கள் மனநிலைகளை  மாற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். பிற்படுத்தப்ப்பட்ட கிராமங்களில் வாழும் எமது எதிர்கால சந்ததியினருக்காக  ஒரு சில தியாகங்களை செய்வதற்கு திடசங்கற்பம் பூணுமாறு உங்கள் ஒவ்வொருவரையும் வினயமாக கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். 

அத்தோடு பிறந்துள்ள புதிய வருடத்தில்  புதியதாய் ஆசிரியப்பணிகளில் இணைந்துள்ள அனைவருக்கும், உங்கள் பணி  சிறக்கவும் அதனுடாக எமது மாணவ மணிகளின் வாழ்வில் ஒளி பிறக்கவும் வேண்டுமென்று எமது கிழக்கிலங்கை உயர்க்கல்வி மாணவர் ஒன்றியத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


»»  (மேலும்)

கிழக்கின் அரசியல் எழிச்சியில் 'தேனீ' யின் வகிபாகம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்-பிள்ளையான்
மனித உரிமை போராளியும்  ஊடகவியலாளருமான யேர்மனியை வசிப்பிடமாக கொண்ட ஜெமினி என்றழைக்கப்படும் கங்காதரன் அவர்கள் காலமாகியதை ஒட்டி பலத்தரப்பட்டோரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவருமான சந்திரகாந்தன் அவர்களும் தனது முகநூல் அஞ்சலி குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளார். 

'காலம்சென்ற ஊடகவியலாளர் ஜெமினி அவர்கள் நடாத்திய தேனீ இணையத்தளமானது கிழக்கு மக்களின் அரசியல் எழிச்சியில்  கொண்ட வகிபாகம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு  கிழக்கு போராளிகளின் நீதிக்கான குரல்களுக்கு என்றும் மதிப்பளித்து   வந்த  ஜெமினி அவர்களின் ஜனநாயக பண்பு  மாண்பு மிக்கதும் என்றும் எமது நன்றிக்குரியதுமாகும்.

புகலிட இலக்கிய,அரசியல் பரப்பில் முக்கிய இணையத்தளமான தேனீயின் ஆசிரியராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் என்றும் மறக்கமுடியாதன.

எமது தமிழ் தேசிய போராட்ட பாதையில் 2004ஆம் ஆண்டில் நாம் எதிர்கொள்ள நேர்ந்த  கிழக்கு பிளவின் போது எமது பக்க நியாயங்களை புரிந்து கொண்ட விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஊடகவியலாளர்களுள் ஜெமினி அவர்கள் முதன்மையானவர் ஆகும். 

ஜெமினி அவர்களின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் தோழமைகளுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் எனது இதய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றேன்.  எனவும்  அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.»»  (மேலும்)

ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளின் சாரங்களையும் கட்டிக்காத்த தோழர் ஜெமினி- ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி

தோழர் 'ஜெமினி' காலமானார் என்கின்ற துயர்மிகு செய்தி எம் தோழமைகள்  அனைவரையும் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளது . ஜெமினி என்றதுமே அவரது 'தேனீ' இணையத்தளமே பசுமரத்தாணியாய் எம் கண்முன்னே நிற்கின்றது. 


'தேனீ' என்பது  பத்தோடு பதினொன்றான இணையத்தளமல்ல. பாசிசத்தின் கண்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட ஜெமினி என்னும் தோழனின் நெஞ்சுரத்தில் பிரதிபலிப்பு ஆகும். ஒரு பெரும் போர் சூழலில் பரபட்ஷமற்ற ஊடக தர்மத்தை  பேணி பாதுகாப்பதில் தேனீ இணையத்தளம் வகித்த பாத்திரம் மிகமிக காத்திரமானது.

விடுதலையின் பெயரில் புறந்தள்ளப்பட்ட சாமானிய மக்களின் குரலாக தேனீ ஒலித்தது. தேனீ இணையத்தளத்தின் செயற்பாடுகளில் ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளின் சாரங்களையும் கட்டிக்காக்க முழுமையாக தோழர் ஜெமினி ஒருபோதும் பின்நிற்கவில்லை. மாற்று கருத்துக்களுக்காக குரல்கொடுப்பதென்பது தற்கொலைக்கு சமனான சூழலொன்றில் தோழர் ஜெமினியின் பங்களிப்பானது மதிக்கத்தக்கது மட்டுமன்றி மகத்தானதுமாகும்.

தமிழ் சூழல் என்பதே புலி-பாசிசமாய் மாறி நின்ற அந்த இருள் நிறைந்த காலங்களில்  அச்சமும் கொலை பயமுறுத்தல்களும் அவரை எதுவுமே செய்துவிடவில்லை. கிழக்கு போராளிகளின் ஜனநாயக மீள் வரவின் போது அவர்களின்  நியாயங்களை  வெளிக்கொணரவும் கிழக்கில் ஒரு ஜனநாயக மீட்சியையும்  இயல்பு வாழ்க்கையையும் ஏற்படுத்தவும் 
எமது முன்னணி வெளியிட்டு வந்த அத்தனை அறிக்கைகளையும் பிரசுரிப்பதில் தோழர் ஜெமினி காட்டிய பன்மைத்துவத்தை மதிக்கும் பக்குவத்துக்கு நாம் என்று தலைவணங்குகின்றோம். தோழர் ஜெமினிக்கு எமது  இதய அஞ்சலிகள் உரித்தாகட்டும். 

தோழர் ஜெமினியின் ஈடு செய்யமுடியாத  இழப்பில் சிக்கி தவிக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் மற்றும் தோழமை சக்திகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 


ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி 
kilakku@hotmail.com
»»  (மேலும்)

1/21/2021

வல்வட்டித்துறை நகராட்சியின் சாதியபாகுபாட்டுக்கு எதிராக பொது நலவழக்கு

வல்வட்டித்துறை நகரசபைக்குட்பட்ட ஊரணி கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரேத எரிப்பு கொட்டகையானது சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.ஏற்கனவே ஒரு பிரேத எரிப்பு கொட்டகை உள்ளநிலையில் இன்னுமொரு கொட்டகை உருவாக்கப்பட்டதன்  பின்னணி குறித்து எழுகின்ற சந்தேகங்கள் இதற்க்கு காரணமாகும்.அதாவது இப்பிரதேசத்தில் வாழும் வெள்ளாள சமூகத்தை சேர்த்தவர்கள் ஏனைய சாதியினரின் சடலங்கள் எரியூட்டப்படும் இடத்தை தவிர்த்து தமது சாதியினருக்கென தனியாக இதனை உருவாக்கியுள்ளனர் என்கின்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

 இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் இந்த நவீன உலகிலும் இத்தகைய சாதிய மனோபாவத்துடன் நாம் இயங்குகின்றோமா? என்கின்ற பலமான கேள்விகளை நம் எழுப்பவேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் சமூக நீதி சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல மனிதகுலத்தில் விழுமியங்களுக்கும் எதிரானதாகும். எனவே இவற்றை தீர விசாரித்து 'தமிழராய் உணர்வோம்' 'தமிழராய் திரள்வோம்'  என்று நாளும் பொழுதும்  ஒப்பாரிவைப்பவர்கள் முதலில் வல்வட்டித்துறை நகராட்சிக்கு எதிராக பொது நலவழக்கு ஒன்றை முதலில் பதிவு செய்வைத்து நல்லது..
 
»»  (மேலும்)

புதிய அதிபர் மற்றம் நம்பிக்கைத்தருகின்றது-வீரமணிஅமெரிக்காவின் 46 ஆவது குடியரசுத் தலைவராக 78 வயது நிரம்பிய ஜோபைடன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று  பதவியேற்றார். அவருடன் ஜனநாயகக் கட்சி சார்பில் குடியரசுத் துணைத் தலைவராக தமிழ்நாட்டுத் தொடர்புள்ள - கருப்பின மக்களுக்கான போராளி முற்போக்கு சிந்தனையுள்ள சட்ட நிபுணர் திருமதி கமலா ஹாரிஸ் அவர்களும் துணை தலைவராக  பதவியேற்றார்!
இது குறித்து இந்தியாவின் திராவிடர் கழகம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் 
புதிய நம்பிக்கையை உலக நாடுகளுக்கும் ஏற்படுத்தும் வண்ணம் புதிய ஆட்சி மலர்ந்துள்ளதாக நம்பிக்கை வெளியிடட்டுள்ளது.

தலைவர் வீரமணி விடுத்துள்ள அச்செய்தியில் டிரம்பின் பல ஆணைகளை ரத்து செய்து, கரோனா தொற்றுத் தடுப்புக்கு முன்னுரிமை கொடுத்து முதல் கையெழுத்திட்டு, பாரீஸ் பருவ நிலை கால ஒப்பந்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட 15 ஆணைகளில் கையெழுத்திட்டார் என்பது ஒரு புதிய நம்பிக்கையை உலக நாடுகளுக்கும் ஏற்படுத்துவதாகும். இந்தியாவுடன் நட்புறவு செழிக்கட்டும்!
பதவியேற்கும் அதிபருக்கும், துணை அதிபருக்கும், அவருடைய குழுவினருக்கும் நமது கனிந்த வாழ்த்துகள்! என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

»»  (மேலும்)

1/15/2021

சமூக அநீதி குறித்த நிபுணர் குழு


விசேட செய்தி

கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் 
கிழக்கு மாகாணத்தின் சமூக அநீதி குறித்த நிபுணர் குழு வருகை தர உள்ளதனால் பொது மக்கள் தங்களது சமூக அநீதி தொடர்பான பிரச்சனைகளை அடுத்த திங்கட்கிழமை 18.01.2021 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும், 19.01.2021 அம்பாறைப் பிரதேச செயலகத்திலும் அந்த நாட்களில் குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் என ஆளுனர் செயலகத்தினால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது - மத்திய அரசு


 டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் திருத்தங்கள் கொண்டு வரத் தயார், ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.


இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே 8 கட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும் - விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இறுதியில் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 51 நாட்களாக போராடி வருகின்றனர். மேலும், 10-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

பொங்கலன்று ஏறாவூரில் புடவைக் கடைகளுக்கு சீல்


கொரோனா வைரஸ் தடுப்புச் செயலணியால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை அனுசரிக்காமல், புடவைக் கடைகளுக்குள் வியாபாரம் மேற்கொண்டமைக்காக 6 புடவைக் கடைகளுக்கு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினர் சீல் வைத்துள்ளனர்.

கொரோனா தவிர்ப்பு செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின்படி, கட்ந்த திங்கட்கிழமை (11) முதல் இன்று (14) வரை பலசரக்குக் கடைகள், புத்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், மருந்தகங்கள், சிகையலங்கார நிலையங்கள், அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்படுதல் வேண்டும்  என்று கேட்கப்பட்டிருந்தாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்த அறிவித்தலை மீறி, சில புடவைக் கடைகளுக்கு உள்ளே தைப்பொங்கல் உடுதுணிகள் வியாபாரம் இடம்பெற்றாலேயே தாம் இவ்வாறு கடைகளுக்குச் சீல் வைத்ததாக பொதுச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

அரசாங்க இலச்சினையுடன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த அறிவித்தலில் தனிமைப்படுத்தப்பட்ட வர்த்தக நிலையம் கண்காணிக்கப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இங்கு வெளியாட்கள் எவரும் உட்செல்ல வேண்டாம். குறிப்பிடப்பட்ட 12.01.2021 தொடக்கம் 25.01.2021 வரை இக்காலப் பகுதியினுள் வழங்கப்பட்ட அறிவுரைகளை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏறாவூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
»»  (மேலும்)

1/13/2021

ஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு--நாளை இறுதி தீர்ப்பு
மட்டக்களப்பு மாவட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் அவர்களின் கொலை தொடர்பாக பிள்ளையான்  என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். 

2005ஆம் ஆண்டு மகிந்தவின் ஆட்சிகாலத்தில் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டவேளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு வடக்கு/கிழக்கு என்று இரண்டாக பிளவு பட்டு பரஸ்பர சகோதரப்படுகொலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இக்காலத்தில் மட்டும் கிழக்குமாகாணத்தில் பலநூறு கொலைகள்  நடந்தன.

இச்சந்தர்ப்பத்தில்தான் மானிப்பாயை சேர்ந்தவரும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமாகவிருந்த ஜோசேப் பரராஜசிங்கம் இனம்தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். அவரைப்போன்று சகபாராளுமன்றஉறுப்பினர் கிங்ஸிலி இராசநாயகமும்,சக வேட்பாளரான இராஜன் சத்தியமூர்த்தியும் அதே சமகாலப்பகுதியில் கொல்லப்பட்டனர். 

இதில் ஜோசேப் பரராசசிங்கம் கொல்லப்பட்டபோது 'மாமனிதர்' என்று அவருக்கு வடக்கு புலிகள் புகழாரம் சூட்டினர். அதேவேளை அவரை கிழக்கு புலிகளே கொன்றார்கள் என்றும் குற்றம் சாட்டினர். ஆனால்  ராஜன் சத்திய மூர்த்தியும் கிங்ஸிலி ராஜநாயகமும் கொல்லப்படவேண்டியவர்கள் துரோகிகள் என்று பிரச்சாரம் செய்து அக்கொலைகளுக்கு உரிமைகோரினர் பிரபாகரன் தலைமையிலான வடக்கு புலிகள்.

இந்நிலையில்தான் அவ்வேளைகளில் கிழக்கு புலிகளின் அணியில்  முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த பிள்ளையானின் தலைமையில்தான்  ஜோசேப் பரராஜசிங்கத்தின் கொலை நடாத்தப்பட்டதாக  புலிகளது ஊடகங்கள் செய்திகளை பரப்பின. சர்வதேச தமிழர்களிடையே வியாபித்திருந்த ஆயிரக்கணக்கான புலிகளது பினாமி இணையத்தளங்கள் நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் மற்றும் வானொலிகள் தொலைக்காட்சிகள்  போன்றவை  ஊடாக இச்செய்தி  மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டது.

பத்து வருடங்களுக்கு மேலாக ஒரு செய்தியானது   பல்லாயிரம் தடவைகளில் மீள மீள மக்கள் மனதின் பதியப்பட்டதனுடாக   'ஜோசேப் பரராசசிங்கத்தை பிள்ளையானே கொன்றார்.' என்கின்ற பரப்புரை தமிழர்களின் பொது மன உளவியலில் ஆழமாக பதியப்பட்டது.. 

மறுபுறம் பிள்ளையான் புலிகளிலிருந்து பிரிந்த கிழக்கு புலிகளை அடிப்படையாக வைத்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்கின்ற புதிய கட்சியை  தொடங்கி அதனுடாக 2008ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலூடாக  கிழக்குமாகாண முதலமைச்சராக தெரிவானார். 2014ஆம் ஆண்டுவரை அவர் ஆட்சியிலிருந்தார். அதனுடாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சவாலான ஒரு அரசியல் தலைமையாக வளர்ந்துநின்றார்.

இந்நிலையில்தான் 2015ஆம் ஆண்டு இலங்கையில் மகிந்த பதவியிழந்து மைத்திரி தலைமையிலான புதிய ஆட்சி  'நல்லாட்சி' உருவானது. கடந்தகால யுத்தக்குற்றங்கள் எல்லாம் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய   புதிய ஆட்சியை உருவாக்குவதில் உறுதுணை வகித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பின்புலத்தில் ஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால் அதே கட்சியை சேர்ந்தவர்களாயிருந்து அதே காலப்பகுதியில் கொல்லப்பட்ட கிங்ஸிலி இராஜநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றவர்களுக்கு யாருமே நீதி கோர முன்வரவில்லை.இலங்கை அரசாங்கத்தின்   சட்டமா அதிபர் திணைக்களமே பிள்ளையானுக்கெதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. அதனடிப்படையில் 2005ஆம் ஆண்டு பிள்ளையான் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான  பிரதீப் மாஸ்டர் என்பவர் குற்ற புலனாய்வு துறையினருக்கு வழங்கியதாக சொல்லப்பட்ட  வாக்குமூலம் ஒன்றையே   அடிப்படையாக கொண்டே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்  பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார். 


அதேவேளை  சந்தேக நபர்கள் நீதி மன்றத்தில் ஆஜர் ஆக்கப்பட்ட  போது தனது பெயரில் குற்றப்புலனாய்வு தரப்பினர் சமர்ப்பித்த வாக்குமூலமானது தனது சொந்த விருப்பத்தின் பெயரில் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று பிரதீப் மாஸ்டர்  அந்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் மறுதலித்திருந்தார். இலங்கை புலனாய்வு துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் ஒன்றும்  புதிய விடயமல்ல. கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த  பல்லாயிரம் இளைஞர்களுக்கும் நடந்ததுதான். எனவே பிரதீப் மாஸ்டரின் வாக்குமூலத்தை குறித்தவழக்கில் ஆதாரமாக கொள்ளலாமா இல்லையா என்பதையிட்டு கடந்த ஒருவருடமாக வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இறுதியில் அந்தவாக்குமூலமானது கொழும்பு மேன் முறையீட்டு  நீதிமன்றத்தால் கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டது.   அதனடிப்படையில் பிள்ளையானுக்கு மட்டக்களப்பு நீதி மன்றம் கடந்தமாதம் பிணை வழங்கியுள்ளது. அந்த வேளையில் இந்த வழக்கில் பிள்ளையானுக்கு பிணை வழங்கப்படக்கூடாது என்று சுமந்திரன் தாமாகவே முன்வந்து வாதாடியமை பிள்ளையானின் கைதானது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அரசியல் பழிவாங்கலே  என்கின்ற குற்றச்சாட்டை  மேலும் உறுதி செய்தது.

 ஜோசேப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் அடிப்படை  ஆதாரமாக  கொள்ளப்பட்ட பிரதீப் மாஸ்டர் என்கின்ற சந்தேகநபர் வழங்கிய வாக்கு மூலம் ஒன்றை தவிர வேறு தடயங்களையோ ஆதாரங்களையோ,மனித சாட்சியங்களையோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால்  கடந்த ஐந்து  ஆண்டுகால அவகாசத்தில்  நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கமுடியவில்லை.  இந்நிலையில் நேற்று மட்டக்களப்பு  நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் இவ்வழக்கை தொடர்ந்து கொண்டு நடத்துவதற்கு எவ்வித ஆதாரங்களும் தம்மிடம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த நல்லாட்சி கால அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட  சட்டமா அதிபரும் குறித்த சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட அரச தரப்பு சட்டத்தரணியுமே  இவ்வழக்கை தொடர்ந்து நடாத்த தம்மிடம் வேறெந்த ஆதாரங்களும் இல்லை என்று கைவிரித்துள்ளனர்.

எனவே இவ்வழக்கின்   இறுதி தீர்ப்பானது நாளை புதன்கிழமை வழங்கப்படவுள்ளது. 


மீன்பாடும் தேனாடான் 


»»  (மேலும்)

1/12/2021

திகிலிவெட்டை பாலத்தினை நிர்மாணித்தல்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படியான திகிலிவெட்டை பாலத்தினை நிர்மாணித்தல் தொடர்பான இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினல் இன்று   இடம்பெற்றது. எதிர் வருகின்ற ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அதனடிப்படையில் 
இப்பாலம் தொடர்பான அனைத்து திட்ட அறிக்கைகளையும் தயார் செய்து அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும்  மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளருக்கு மட்டக்கக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான சி.சந்திரகாந்தனால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 
இக்கூட்டத்தில் நீர்ப்பாசன பணிப்பாளர் அத்துடன் காணிப் பயன்பாட்டு குழுவினுடைய பணிப்பாளர் உட்பட பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  »»  (மேலும்)

1/07/2021

கஜேந்திரர்களின் தெருச்சண்டை அரசியல்

முன்னணி, ‘கஜேந்திரர்கள் அணி எதிர் மணிவண்ணன் அணி’  என்கிற செங்குத்துப் பிளவை இன்று சந்தித்து நிற்கின்றது. யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளில் மணி ஆதரவு அணி, கஜேந்திரர்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக நின்று பெற்றிருக்கின்ற வெற்றி அதற்கான அண்மைய சான்று. 


முன்னணியின் ஆதரவாளர்கள் இன்றைக்கு இரண்டு அணிகளாக பிரிந்து நின்று சமூக ஊடகங்களில் ஒருவரை ஒருவர் துயிலுரிந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் என்னென்ன தகிடுதித்தங்களைச் செய்தோம், யாரின் மீது எவ்வாறான அவதூறுகளையெல்லாம் திட்டமிட்டு உருவாக்கி பரப்பினோம், யாரை எதற்காக அச்சுறுத்தினோம் என்பது தொடங்கி அனைத்து தரம் தாழ்ந்த வேலைகள் பற்றியும் எந்தவித சங்கோஜமும் இன்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

முன்னணியின் தலைமைத்துவம் இவ்வாறான தரம் தாழ்ந்த வேலைகளை எந்தவித அறமும் இன்றி கடந்த காலங்களில் அனுமதித்தது. மாற்றுக் கட்சிகள், அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், கருத்துருவாக்கிகள் என்று எந்தவித பாகுபாடுமின்றி ‘துரோகிகள்’ அடையாளம் தொடங்கி அவதூறுகள் வரையில் வகை தொகையின்றி போலி பேஸ்புக் கணக்குகளில் பரப்பினார்கள். அரசியல் விமர்சனத்துக்கும் அவதூறுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாத நிலையொன்றை, முன்னணியை நோக்கி திரண்ட இளைஞர்களிடம் போதித்தார்கள். கஜேந்திரர்கள், மணி தொடங்கி அதற்கான பொறுப்புக்களை முன்னணியின் அனைத்து சிரேஷ்ட உறுப்பினர்களும், ஆலோசகர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இன்றைக்கு முன்னணியின் இரு அணி ஆதரவாளர்களும் மிகுந்த மன உளைச்சலோடு இருக்கிறார்கள். அது, ஒருவரை ஒருவர் துயிலுரிந்து கண்ட களைப்பினால் வருவது. முன்னணியின் இளைஞர்களை நோக்கி, கடந்த காலங்களில் அரசியல் அறமொன்றை பேணுங்கள் என்று பலரும் சொல்லி வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம், கும்பல் மனநிலையில் செயற்பட்டு தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி வந்திருக்கிறார்கள். இரு அணிகளாக பிரிந்து விட்ட போதிலும், கடந்த காலத்தில் எவ்வாறான பழக்கத்தை அரசியலாக நம்பி பழகிக் கொண்டார்களோ, அதிலிருந்து அவர்களினால் மீள முடியவில்லை. 

அரசியல் என்பது அவதூறுகளினால் ஆனது என்ற நிலைப்பாட்டினை முன்னணி எந்தவித சங்கடமும் இன்றி விதைத்தது. தம்முடைய கருத்துக்களை, நிலைப்பாட்டினை ஆதரிக்கும் வரையில்தான், அவர்கள் குறித்து பேச மாட்டோம். கொஞ்சமாக மாற்றுக் கருத்தினையோ, நிலைப்பாட்டினையோ வெளிப்படுத்தினாலே, அவர்களை நோக்கி அவதூறு எனும் கொடுங்கரங்களை நீட்டுவோம் என்பதுதான் முன்னணியின் ஒற்றை நிலைப்பாடு. 

முன்னணிக்குள் கற்றவர்கள், புத்திஜீவிகள் என்ற பெயரில் இருக்கின்ற பலரும் இவ்வாறான நிலைப்பாடுகளை பெருமளவு ஊக்குவித்தார்கள். சொந்தப் பெயர்களில் அறம் போதித்துக் கொண்டு போலிக் கணக்குகளில் அசிங்கங்களை அரங்கேற்றினார்கள். (இன்னமும் அப்படியே இருக்கிறார்கள்.)  அதுவும் முன்னணியின் இளைஞர்களை ஏவல் நாய்களாகவே செயற்பட வைத்தார்கள். இன்றைக்கு அவர்கள் வளர்த்து விட்ட அவதூறு அரசியல் அவர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. பொது வெளியில் பல்லிளிக்க வைக்கின்றது. 

எந்தக் கட்சியாக, அமைப்பாக, தரப்பாக இருந்தாலும் அரசியலை குறைந்தபட்ச அறத்தோடாவது முன்னெடுக்க முனையுங்கள். அதுதான் அரசியல் மீதான நம்பிக்கையை விதைக்கும். இல்லையென்றால், இவ்வாறான அசிங்கங்களைத்தான் அரங்கேற்றும். 

(முன்னணியின் அவதூறு அரசியலுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல இன்றைய தமிழரசுக் கட்சியின் அரசியல். அது பற்றி நிறையத் தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறேன். தேவைப்படுபவர்கள், கடந்த காலப் பத்திகளை வாசியுங்கள்.)

 நன்றி *முகநூல் புருஷோத்தமன் தங்கமயில்
»»  (மேலும்)

1/06/2021

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இருதயவியல் உபகரணங்கள் கிடைத்தன


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) வழங்கப்படவிருந்த வைத்திய இயந்திர உபகரணங்கள் வேறு மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அதிரடி நடவடிக்கையால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று காலையில் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)