1/12/2021

திகிலிவெட்டை பாலத்தினை நிர்மாணித்தல்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படியான திகிலிவெட்டை பாலத்தினை நிர்மாணித்தல் தொடர்பான இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினல் இன்று   இடம்பெற்றது. எதிர் வருகின்ற ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அதனடிப்படையில் 
இப்பாலம் தொடர்பான அனைத்து திட்ட அறிக்கைகளையும் தயார் செய்து அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும்  மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளருக்கு மட்டக்கக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான சி.சந்திரகாந்தனால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 
இக்கூட்டத்தில் நீர்ப்பாசன பணிப்பாளர் அத்துடன் காணிப் பயன்பாட்டு குழுவினுடைய பணிப்பாளர் உட்பட பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  0 commentaires :

Post a Comment