2/11/2021

வாகரையில் வாகை சூடிய தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

இன்று வாகரை பிரதேச சபையினுடைய புதிய தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் கௌரவ.கண்ணப்பன் கணேசன்(சூட்டி) அவர்கள் போட்டி இன்றி தெரிவுசெய்யப்பட்டார். இப் பிரதேச சபையானது 18 உறுப்பினர்களை கொண்ட சபையாகும்.

இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த பிரதேசசபையின் அதிகாரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சினால் கைப்பற்றப்பட்டது, கிழக்கு மாகாணம் இயல்புக்கு திரும்பிய பின்னர் 2008ஆம் ஆண்டு பிரதேச சபைக்கான தேர்தலிலும் வாகரை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவாகியிருந்தவர் கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.


0 commentaires :

Post a Comment