2/19/2021

மட்டக்களப்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் சதோச விற்பனை நிலையங்கள்


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த வர்த்தக வாணிப அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களால் மட்டக்களப்பு மாநகரத்தில் #சதோச பிராந்திய அலுவலகமும் அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய 6 முக்கிய நகரங்களில விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் மாதங்களில் அமைப்பதற்கான திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேற்படி கலந்துரையாடலானது மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள வாணிப அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்கலான குழுவுடன் இடம்பெற்றது.

இக்கூட்டத்தின்போது மட்டக்களப்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் சதோச விற்பனை நிலையங்கள் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment