2/03/2021

வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் மாவை அல்ல -பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் - தொடங்கியது குடும்பிச்சண்டை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது இது வரை தீர்மானிக்கப்படவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 


இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல்குழுக் கூட்டம் கடந்த 30ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றிருந்தது.இதன்போது, சிறிதரன் எம்.பி கருத்து தெரிவித்த போது, வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா களமிறக்கப்பட வேண்டுமென்றார். சீ.வீ.கே.சிவஞானம் அதை ஆதரித்திருந்தார்.

இந்நிலையில்,  அதை மறுத்து  முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையென நேற்று முன்தினம் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

 0 commentaires :

Post a Comment