6/20/2021

சந்தனமடு வீதிசந்தனமடு பிரதேசத்தில் சுமார் 60.35 மில்லியன் ரூபா செலவில் இரண்டு கிலோமீட்டர் நீளமான பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை விவசாயிகளின் அன்றாடப் போக்குவரத்து  இலகுபடுத்தப்படுகின்றது. 

விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய  பொருட்களை இலகுவாக ஏற்றிச்சென்று சந்தைபடுத்துவதை நோக்கமாகக் கொண்டே இப்பாதையானது உருவாக்க ப்படுவதாக  பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வின்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் சசிநந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும்கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment