7/23/2021

கிளிநொச்சியில் 5.5 கோடி ரூபாவில் கண் மற்றும் என்பு முறிவு விடுதிகள்

கிளிநொச்சியில் 5.5 கோடி ரூபாவில் அமைக்கப்பட்ட கண் மற்றும் என்பு முறிவு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.
Peut être une image de 1 personne, position debout et intérieur
(TAMILSELVAN MURUKAIYA) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 5.5 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட
கண் மற்றும் என்பு முறிவு விடுதி இன்று (23) சம்பிரதாயபூர்வமாக திறந்து
வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த பெரும் குறையை  நிவர்த்தி செய்யும் வகையில் SK. நாதன் அறக்கட்டளையின் ஸ்தாபகர் எஸ். கதிர்காமநாதன் அவர்களின் சொந்த நிதியில் அமைக்கப்பட்ட இவ் விடுதிகள்
இரண்டும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு இன்றைய தினம்  திறந்து வைக்கப்பட்டு வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைகழக மருத்துவப்பீடத்திற்கு  PCR  இயந்திரம், யாழ் போதனாவைத்தியசாலைக்கு CT scan  இயந்திரம் என வடக்கின் மருத்துவ துறைக்கு
பல்வேறு வகையில் உதவிகளை வழங்கி வரும்  SK. நாதன் அவர்களின் மற்றுமொரு உதவியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கான  இவ்விரு மருத்துவ விடுதிகளும் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக வைத்தியசாலையிடம்
கையளிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தலைமையில்
இடம்பெற்ற  இன்றைய இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.
கேதீஸ்வரன், நன்கொடையாளர் எஸ். கதிர்காமநாதன், கட்டத் திணைக்கள பொறியியலாளர் சி.சசிகரன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.
சத்தியமூர்த்தி, வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே. ராகுலன் மற்றும் வைத்தியர்கள்,தாதியர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 commentaires :

Post a Comment