12/04/2022

காவியா பெண்கள் அமைப்பின் 20 ஆம் ஆண்டு நிறைவுவிழா.காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையத்தின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்றைய தினம் திருமதி. Y.அஜித் குமார்(காவியா ) தலைமையில் செல்வநாயகம் மண்டபத்தில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன்போது முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான கௌரவ. பூபாலபிள்ளை பிரசாந்தன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வின் போது காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையத்தின் வளர்ச்சிப் பயணம் தொடர்பிலும் அதன் அனுபவம் தொடர்பிலும் ,எதிர்கால காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை உறுப்பினர் சிவபாக்கியநாதன், We-Effect  நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி T.மயூரன், காவியா நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் திருமதி. சதுர்த்திகா, மட்டக்களப்பு மாவட்டவர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சிதமூர்த்தி, வங்கி முகாமையாளர்கள் உட்பட துறைசார் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment